முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வழக்கு தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் (Dileepa Peiris) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (22.05.2025) கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவரது பிணை மனு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றது.
பின்னர், சந்தேக நபருக்காக முன்னிலையான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.
சாட்சியங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, சந்தேக நபரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இவ்வாறான பின்னணியில் மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் “இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ரணிலின் கைதை தொடர்ந்து தென்னிலங்கையின் அரசியல் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.