Business

பிரான்ஸ் பிரதமர் திடீர் ராஜினாமா

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2025 செப்டம்பர் 9 ஆம் திகதியன்று பிரான்ஸின் 47ஆவது பிரதமராக இவர் நியமிக்கப்பட்டு 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

 

புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பிறகு பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குள் பிரான்சின் ஐந்தாவது பிரதமராக லெகோர்னு பதவியேற்றார்.

2024 ஆம் ஆண்டு மக்ரோனால் நடத்தப்பட்ட திடீர் தேர்தல்கள் முடிவில்லாததால், எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காததால் நாடு அரசியல் ரீதியாக முடங்கிப் போனது.

தேர்தல்களுக்குத் திரும்பாமல், தேசிய சட்டமன்றம் கலைக்கப்படாமல், ஸ்திரத்தன்மைக்குத் திரும்ப முடியாது என்று லெகோர்னு பதவி விலகிய பின்னர் தேசிய பேரணித் தலைவரிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top