கனடா அதன் தங்க ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்துள்ளது. 2026 ஜனவரியில், அமெரிக்காவைத் தவிர்த்து பிற நாடுகளுக்கான தங்க ஏற்றுமதியில் கனடா புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த வளர்ச்சி, கனடாவின் வர்த்தகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு கனடாவின் தங்க ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
அதில், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் கனடாவிலிருந்து அதிக அளவில் தங்கத்தை வாங்கியுள்ளன.
இதனால், கனடாவின் மொத்த தங்க ஏற்றுமதி உயர்ந்துள்ளதால், உற்பத்தி மற்றும் எரிசக்தி போன்ற பிற துறைகளில் உள்ள குறைபாடுகளை மறைத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவை சார்ந்திருந்த வர்த்தகத்தில் இருந்து விலகி, பல்வேறு சந்தைகளில் கனடா தன்னை நிலைநிறுத்தும் முயற்சியில் உள்ளது.
உலகளாவிய பொருளாதார அசாதாரண நிலைமைகள் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால் கனடாவின் தங்கத்திற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.
கனடாவின் பொருளாதாரத்திற்கு இது ஒரு தற்காலிக ஆதரவாக இருந்தாலும், நீண்ட காலத்தில் பிற துறைகளில் உள்ள பலவீனங்களை சரிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
கனடா இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவுகளை உருவாக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
