India

செம்மணியில் இன்றும் அகழப்பட்ட 11 என்புக்கூடுகள்

 

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(22) புதன்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் இன்றும் அகழப்பட்ட 11 என்புக்கூடுகள் | Chemmani Mass Graves Jaffna

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 471 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 455 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

அதேவேளை இன்றைய தினம் புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் 08பேர் கொண்ட குழுவினர் அகழ்வு பணியை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட நிபுணர்குழுவினருடன் அகழ்வுபணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top