டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீஸ் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்க உள்ளாா்.