Canada

பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலை புலிகளை நீக்க கனடா வலியுறுத்தும்: பற்ரிக் பிரவுண் பகிரங்கம்

 

 

“தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலிலிருந்து நீக்குவதோடு ஐக்கிய நாடுகள் சபையும், ஏனைய நாடுகளும் தமிழின படுகொலைகளை பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் கனடா வலியுறுத்தும்” என இளம் அரசியல் பிரமுகர் பற்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வெளிவரும் டொரோன்டோ ஸ்டார் (Toronto Star)பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்

பிரவுண் கனடா தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட ஒரு பெயராகும். பிரம்டன் வாழ் தமிழர்களிடையே மட்டுமன்றி கனடா முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் பெருபான்மையான ஆதரவை பெற்ற ஒரு இளம் அரசியல் பிரமுகர் ஆவார்.

அவர் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக தனது குரலை கனடிய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளார்.

“கடந்த வருடம் தை மாதம் தமிழ் மரபு திங்கள் மாதமாக கொண்டாடப்படும் தருணத்தில், இலங்கையில் போரின் போது உயிரிழந்தவர்களுக்கான நினைவு சின்னம் இலங்கை பல்கலைக்கழகத்தில் அழிக்கப்பட்டதை கண்டித்துள்ளார்.

இதன் பின்னர், தனது ஆட்சி பகுதியான பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை நிறுவுவதற்கு ஆதரவு வேண்டி பிரம்டன் நகர சபையில் ஆதரவினை பெற்று அதனை கட்டி முடிப்பதாக கடந்த வருடம் உறுதியளித்துள்ளார்.

இது கனடா மட்டுமன்றி உலகமெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான விடயமாகும். தமிழர்களுக்கு தாம் கடந்து வந்த பாதைகள் மறக்கப்படாமல் இருப்பதற்கு நம்பிக்கை தரக் கூடிய விடயமாக இருக்குமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த வருடம் தேர்தல் சூளுரையாக, இவ்வருட மாகாண சபைத் தேர்தல் மற்றும் கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தான் பிரதமராக வரும் பட்சத்தில், மே மாதம் 2009 ஆம் ஆண்டு நடந்த தமிழர் இன அழிப்பு நடவடிக்கையின் போது கனடா அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் போனதற்கு அரசாங்கம் சார்பாக தான் மன்னிப்புக்க கேட்க இருப்பதோடு, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலிருந்து நீக்க இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இனவெறி பிடித்த அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் இருந்த போது என்ன நடந்தது என்று அறிந்தோம்.  நான் கனடாவினை பூமியில் அனைவருக்கும் சம உரிமையும், வாய்ப்புகளும் வழங்கும் ஒரு நாடாக மாற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.

தவறான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பதன் விளைவுகளை பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். தற்போது உங்களுக்கு தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இறுதியில் குறைந்தபட்ச வாக்கு எண்ணிக்கைகளே வெற்றியை தீர்மானிக்கப்போகின்றது.

அடுத்த பத்து வருடங்களுக்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளிற்கோ அல்லது சமூகத்தினருக்கோ மாற்றத்தினை உண்டு பண்ண முடியவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை.

என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்கின்றேன். எனது தமிழ் நண்பர்களும் அவர்களால் முடிந்த உதவியை செய்கிறார்கள்.நான் உங்கள் பங்கினையும் செய்ய வலியுறுத்துகின்றேன்.

எனது தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகள் பற்றி சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து அவை தொடர்பாக கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

அநேகமாக உங்கள் நண்பர் எனது நண்பராகவும் இருப்பார் ”

எனவும் கருத்து தெரிவித்துள்ளார். பற்ரிக் பிரவுண் பற்றிய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, உங்களுக்கு நேரடியான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உள்ளனவா? இந்த Zoom செயலி ஊடாக கருத்தினை பதிவு செய்யுங்கள்.

அல்லது அவரை பிரதமராக்க நீங்கள் ஏன் பதிவு செய்யவில்லை என்பதையும் குறிப்பிடுங்கள். Zoom இற்கான இணைப்பு TamilsforPatrick.com

பற்ரிக் பிரவுண் ஆதரவு எமது தமிழர்களுக்கான குரலை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் குரலாக பற்ரிக் பிரவுண் உள்ளார். எமக்கான ஒரு அடையாளத்தினை எமது சொந்த நாட்டில் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கனடாவில் எமது இனத்தினை ஒரு பெருமைக்குரிய, கலாசாரம் மற்றும் பண்பாட்டினை பெருமைப்படுத்தும் இனமாகவும், எமது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் எமது சகோதரர் பற்ரிக் பிரவுண் அவர்களை இந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற வைப்போம் எனவும் ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top