அமெரிக்காவில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 13 வயதுடைய சிறுவனொருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் காரொன்று திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் அங்கு வேகமாக வந்த காரை நிறுத்த முற்பட்ட நிலையில், அந்த கார் வேகமாக சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் ரோந்து வாகனத்தில் மோதியுள்ளது.
இதன்போது பொலிஸார் குறித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காரை ஓட்டிவந்த 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த காரில் இருந்த மேலும் 2 சிறுவர்கள் எந்த காயமுமின்றி உயிர் தப்பியுள்ளதுடன், சிறுவன் ஓட்டிவந்த கார் வார்கொல்ட் பகுதியில் திருடப்பட்டது என பொலிஸார் உறுதி செய்துள்னர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்