News

அமெரிக்கா: மருத்துவமனையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி,பலா் காயம்.

 

 

துப்பாக்கிச் சூடு நடத்திய நபா் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை ஓக்லஹோமா, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா்.

உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா்.

இந்த நிலையில், துல்சா நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மா்ம நபா் ஒருவா் அங்கிருந்தவா் மீது சரமாாியாக துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இ்ந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக போலீசாா் தொிவித்தனா். துப்பாக்கியால் சுட்ட நபா் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாா் தொிவித்தனா்.

இ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலா் காயமடைந்து உள்ளனா். இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top