News

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது ரஷ்ய படை தாக்குதல்; உக்ரைன் அரசு குற்றச்சாட்டு.

 

 

ரஷ்ய படை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைன் அரசு குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது.

ரஷ்ய படை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைன் அரசு குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதலை தொடர்ந்து நடத்தி பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

வீரர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இரு தரப்பிலும் கொல்லப்பட்டு உள்ளனர். உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவத்தின் தாக்குதலில், பள்ளி கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் மக்களின் குடியிருப்புகள் இலக்காகி உள்ளன. பள்ளி கூடங்கள் மற்றும் குடிமக்களின் உட்கட்டமைப்பு மீது உள்நோக்குடன் தாக்குதல் நடத்துவது என்பது போர் குற்றம் ஆகும். ஆனால், கட்டிடங்களை விட நூற்றுக்கணக்கான பள்ளி கூடங்கள் தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டு உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்று பள்ளி கூடங்கள் மீது பரவலாக தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டு இருப்பது, ரஷியாவின் உள்நோக்கத்திற்கான சான்றாக உள்ளது. ராணுவ நடவடிக்கையின்போது, இதுபோன்று கட்டிடங்கள் சேதம் அடைவது தற்செயலானது என்று கூறுவது ஏற்று கொள்ள முடியாதது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 7ந்தேதி பிலோஹோரிவ்கா என்ற கிராமத்தில் இருந்த பள்ளி ஒன்றின் மீது நடந்த குண்டுவீச்சு தாக்குதலில் அந்த பள்ளி தரைமட்டம் ஆனது. 60 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

செர்னிஹிவ் நகரில் 35 பள்ளி கூடங்களில் 7 பள்ளிகள் மட்டுமே தாக்குதலில் பாதிக்கப்படாமல் உள்ளன. 3 பள்ளிகள் முற்றுலும் ஒன்றுமில்லாமல் போய் விட்டன என நகர கவுன்சில் தெரிவித்து உள்ளது.

உக்ரைனில், மருத்துவமனைகள், காப்பகங்கள் மற்றும் குடியிருப்புகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடந்துள்ளன என கூறப்படுகிறது. குழந்தைகள் வளர்ந்து, படித்து மற்றும் நண்பர்களை உருவாக்க கூடிய புகலிடங்களாக உள்ள பள்ளி கூடங்களை இலக்காக கொள்வது என்பது தீங்கு விளைவிக்க கூடியது. அது, குழந்தைபருவ வளர்ச்சியில் ஆபத்து விளைவித்து அச்ச சூழலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது

. உக்ரைனில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர் குற்றங்களுக்கான அறிக்கைகளை பற்றி சர்வதேச நாடுகளில் இருந்து வந்த வழக்கறிஞர்களை கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உக்ரைன் அரசு வழக்கறிஞர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  .

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top