இங்கிலாந்தில் 45 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.
ஒருங்கிணைந்த இங்கிலாந்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி புதிதாக 45 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.
புதிய பாதிப்பில் இங்கிலாந்தை சேர்ந்த 43 பேருக்கும், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு பட்டியலில் இங்கிலாந்தில் மட்டும் 348 பேரும், ஸ்காட்லாந்தில் 12 பேரும், வேல்ஸ் நாட்டில் 4 பேரும், வடக்கு அயர்லாந்தில் 2 பேரும் அடங்குவர்.
உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு இங்கிலாந்தில் அதிகமாக உள்ளது. ஸ்பெயினில் 259 பேரும், போர்ச்சுகலில் 191 பேரும், ஜெர்மனியில் 150 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.