0% buffered00:00Current time00:00
News

இலங்கையில் என்றுமில்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐ.நா. எச்சரிக்கை!

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தமது உறுப்பு நாடுகளிடம் 47 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான ஜென்ஸ் லெயிர்க்கி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே செலுத்த வேண்டிய நிதி நிலுவை 51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து பாரிய அந்நிய செலாவணி குறைபாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தவிர, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் கூற்றுக்கு அமைய தற்போது 56 ஆயிரம் சிறார்கள் பாரிய போஷாக்கின்மையற்ற நிலையில் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான ஜென்ஸ் லெயிர்க்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top