இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையை கண்டறியவும், தற்போதுள்ள கையிருப்பு பற்றிய தரவுகளை சேகரிக்கவும் உலக சுகாதார அமைப்பு இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியாசிஸ் தெரிவித்தார்.
அவசரகால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அடுத்த 3-4 மாதங்களில் சுகாதார அமைப்பை சரிவடையாமல் பராமரிப்பதற்கும் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், இலங்கைக்கு குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை எட்டுவதற்கு 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் கூறினார்.
இது மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் மனிதாபிமான வேண்டுகோள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அட்ஜோன் கேப்ரியாசிஸ் குறிப்பிட்டார்.