News

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் மேற்கத்திய நாடுகள்தான்: புடின் குற்றச்சாட்டு

 

 

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு உணவு நெருக்கடிக்கு ரஷ்ய- உக்ரைன் போர் என்பது அடிப்படை காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து இவ்விரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது.

இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷ்யாதான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் வளர்ந்து வரும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டினார்.

உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், அது சந்தித்து வரும் பிரச்சினைகளையும் ரஷ்யாவின் மீது திருப்புவதை காண முடிகிறது.

மேலும், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை மோசமாக்குவதுடன், உற்பத்தியை குறைத்து விலைகளை உயர்த்துகின்றன.

உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவு பிரச்சினைகளுக்கு ரஷ்யாவை குற்றம்சாட்டி வருகின்றன.

உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும் எனவும் புடின் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top