News

 கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய மலேசிய அரசாங்கம் ஒப்புதல்..!!

 

 

11 வகையான குற்றங்களுக்குக் மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

கொலை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல குற்றங்களில் தற்போது பயன்படுத்தப்படும் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதாக மலேசியா தெரிவித்துள்ளது.

மரண தண்டனைக்குப் பதிலாக மற்ற தண்டனைகள் விதிக்க மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிரதமர் அலுவலக அமைச்சர் வான் ஜுனைடி துங்கு ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சட்டப்படி 11 வகையான குற்றங்களுக்குக் மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மேலும் 22 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பத்திற்கு சட்டத்தில் ஒப்புதல் இருந்தது.

இந்த நிலையில் தான் கட்டாய மரண தண்டனை அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மரண தண்டனைக்கு பதில் வேறு கடுமையான தண்டனைகளை வழங்க மலேஷிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது 1,300 க்கும் அதிகமானோர் மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த மரண தண்டனையை எதிர்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை என தெரிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள், மரண தண்டனையை தக்கவைத்துக்கொள்ளும் நாடுகள் அதை “மிகக் கடுமையான குற்றங்களுக்கு” மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top