காங்கோவில் வைர சுரங்கம் சரிந்த விழுந்த விபத்தில் சிக்கி 40 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைரச்சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த வைரச்சுரங்கத்தில் தொழிலாளர்கள் வைரத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து சரிந்து விட்டது. அதன் இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். 6 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.