அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பு – புகையிரத நிலையத்தில் இடம்பெற்று வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் இன்றைய தினம் நுழைவதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் பலர் ஒன்றிணைந்து இன்று கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கொழும்பு – காலிமுகத்திடலில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டமானது இன்றுடன் 57வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.