டொமினிக் குடியரசில் அலுவகலத்தில் வைத்து மந்திரி சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

டொமினிக் குடியரசில் அலுவலகத்தில் வைத்து மந்திரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரீபியன் தீவு நாடுகளில் டொமினிக் குடியரசும் ஒன்று. இந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் ஒர்லண்டோ ஜோர்ஜ் மீரா.
இந்நிலையில், ஒர்லண்டோ நேற்று காலை அவர் தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, அந்த அலுவலகத்திற்கு வந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ஒர்லண்டோவை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மந்திரி ஒர்லண்டோ ஜோர்ஜ் மீரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் எம்.பி.யை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.