நாடு தழுவிய ரீதியிலான விவசாயப் புரட்சியொன்றை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படவுள்ள உணவுப் பஞ்சத்தில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பசளை தட்டுப்பாட்டுக்கு மாற்று வழிகளைக் கண்டறிதல், உள்நாட்டு பயிர்ச் செய்கை முறைகளை பிரபல்யப்படுத்துதல், உள்நாட்டு உணவுப் பயிர்ச்செய்கைக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதற்கான நிதியுதவிகள் மற்றும் ஏனைய ஒத்தாசைகளை கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் தன்னார்வ அடிப்படையில் வர்த்தகர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எதிர்பார்த்துள்ளது..