News

பிரித்தானிய புறநகர் பல்கலைக்கழகத்தில் இலங்கைத் தமிழ் மாணவர் மர்ம மரணம்

 

 

பிரித்தானிய புறநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இலங்கைத் தமிழ் மாணவர் ஒருவர் மர்ம மரணம் அடைதுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்தவாரம் 9 ஆம் திகதி அளவில் குறித்த தமிழ் மாணவர் உயிரிழந்ததாக , வெள்லிக்கிழமையன்று பொலிஸார் உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

19 வயதான குறித்த மாணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பல்கலைகழகத்திற்கு சென்ற நிலையில், பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் மாணவர் தங்கியிருந்த அறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவரின் மரணம் தற்கொலை என கூறப்படுகின்றபோதும் அது தொடர்பில் முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதேசமயம் மிகவும் அமைதியான சுபாவமுடைய குறித்த இளைஞனின் மரணம் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top