News

மின் கட்டணம் உயர்ந்தால் அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்படும்! நாடாளுமன்றில் எச்சரிக்கை

 

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதை விட மின்சார உற்பத்திக்கான செலவை குறைப்பது சிறந்தது. அப்படி இல்லாது மின் கட்டணத்தை உயர்த்தினால் அதிகாரிகளின் வீடுகளையும் மக்களின் தீக்கிரையாக்குவர்கள் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல வினா விடைக்கான நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த திசாநாயக்கவால் மின் கட்டணத்தை அதிகரிப்பீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு என்னிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. உற்பத்தி செலவு நிர்வாகச் செலவுகளை கருத்தில் கொண்டு இதனை செயல்படுத்துமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

756 மில்லியன் ரூபா ஒவ்வொரு வருடத்திற்கும் இதற்காக தேவைப்படும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள சூத்திரத்திற்கு இணங்க ஒரு வருடத்திற்கு 250 பில்லியன் ரூபா அளவிலேயே கிடைக்கிறது .அதாவது 500 பில்லியன் ரூபா அதிகமாக தேவைப்படுகிறது இதனை நிவர்த்தி செய்யவே மின்சார சபையானது மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரி உள்ளது.

மின்சார சபை வருடாந்தம் எதிர்கொள்ளும் 500 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டுமாயின் மின் கட்டணத்தை முன்னூறு தொடக்கம் நானூறு சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்த விடயம் தொடர்பாக எனது நிலைப்பாடானது மின்சார கட்டணத்தை உயர்த்துவது விட உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் என்பதே ஆகும்.

அதனை விடுத்து மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு மேலும் சுமையை அதிகரித்தால் மக்கள் அதிகாரிகளின் வீடுகளையும் தீக்கிரையாக்குவர்கள்  என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top