ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் செர்பிய பயணத்தை தடுத்து நிறுத்திய மூன்று நோட்டோ நாடுகளுக்கும், ரஷ்யாவின் விண்வெளித் தலைவர் டிமிட்ரி ரோகோசின் இரவோடு இரவாக ஏவுகணை தாக்குதல் குறித்த மிரட்டலை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளை மேற்கோள் காட்டி பல்கேரியா, வடக்கு மாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய மூன்று நோட்டோ நாடுகளும் தங்களது வான்பரப்பில் பறக்க தடைவிதித்து ரஷ்ய ஜனாதிபதி புடினின் உயர்மட்ட தூதர் செர்ஜி லாவ்ரோவை செர்பியாவிற்கு பயணம் செய்யவிடாமல் தடுத்தனர்.
இதனால் ரஷ்ய வெளியுறவுச் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தனது செர்பிய பயணத்தை ரத்து செய்யவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்.
இது ரஷ்யாவை கடுமையாக கோபப்படுத்திய நிலையில், பல்கேரியா, வடக்கு மாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய மூன்று நோட்டோ நாடுகளும் ரஷ்யாவின் விண்வெளித் தலைவர் டிமிட்ரி ரோகோசின் இரவோடு இரவாக சாத்தான் 2 என அழைக்கப்படும் 208 டன் மற்றும் 15,880 மைல் இலக்கு வரை தாக்ககூடிய சர்மட் ஏவுகணைத் ஏவுவது குறித்த மிரட்டலை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டிமிட்ரி ரோகோசின் வெளியிட்ட ட்விட்டர் தகவலில், சர்மட் ஏவுகணையில் (பாலிஸ்டிக் ஏவுகணை) நல்ல விஷயம் என்ன தெரியுமா? என்ற கேள்வியை முன்வைத்துவிட்டு, அதற்கான பதிலில் ரஷ்யாவின் சர்மட் ஏவுகணை எங்கள் கூட்டு வரலாற்றைக் காட்டிக் கொடுத்த பல்கேரிய கோழைகள், பழிவாங்கும் ரோமானியர்கள் மற்றும் மாண்டினெக்ரின்ஸ் ஆகியோரிடம் பறக்க அனுமதி கேட்காது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நோட்டோவில் சேர உள்ள ஸ்வீடனுக்கும் இது பொருந்தும் என மிரட்டல் விடுத்துள்ளார்.