கொழும்பிலும் கொழும்புக்கு வெளியேயும் இடம்பெற்றுவரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திடீரென மக்கள் கொலை செய்யப்படும் பயங்கரமான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் வாகனங்களை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டது தற்போது உந்துருளிகளை பயன்படுத்தி கொலை செய்யப்படுகின்றது எனவும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
வீதியில் இருக்கும் மக்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவதாகவும் இதுவா ராஜபக்ச உறுதி அளித்த தேசிய பாதுகாப்பு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், குற்றச்சாட்டை நிரூபிக்கும் சாட்சியாளர்களே இவ்வாறு படுகொலை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதாக உறுதி அளித்து ஆட்சிப்படியேறிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பினை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.