News

ஸ்பெயினில் மேலும் 12 பேருக்கு குரங்கு காய்ச்சல்..!

 

ஸ்பெயினில் மேலும் 12 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஓயாத நிலையில் சர்வதே அளவில் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையேயும் பரவி வரும் இந்த குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் சுமார் 300 பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் மேலும் 12 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஸ்பெயினில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் இங்கிலாந்தைத் தொடர்ந்து, அதிகளவில் குரங்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ள நாடாக ஸ்பெயின் மாறியுள்ளது. நோயாளிகள் அனைவரும் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின்படி, குரங்கு காய்ச்சல் வைரசானது காயங்கள், உடல் திரவங்கள், சுவாசத் நீர்த்துளிகள், வைரஸ் கலந்த பொருட்கள் போன்றவற்றின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top