News

இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!

 

இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் பெரும்பாலானவர்கள் லண்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது

உலக அளவில் 28 நாடுகளில் 1,285 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

இங்கிலாந்தை தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கனடாவில் அதிக அளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஆப்பிரிக்காவில் உள்ள எட்டு நாடுகளில் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 72 பேர் குரங்கு அம்மை பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை பரவக்கூடியதாகக் கருதப்படுகிறது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top