News

கடும் நிதி நெருக்கடி – இலங்கையில் மூடப்படும் இரண்டு விமான நிலையங்கள்

 

 

கடும் நிதி நெருக்கடி காரணமாக மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி, பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் விமானப் பற்றாக்குறை காரணமாக இந்த விமான நிலையங்களைத் தொடர்ந்து இயக்குவது பெரும் பிரச்சினையாக இருப்பதாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குறிப்பாக இரண்டு விமான நிலையங்களிலும் ஊழியர்களின் பராமரிப்புக்கு பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

 

மத்தள விமான நிலையத்திற்கு கடமை புரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் சொகுசு பஸ் ஒன்று கட்டுநாயக்காவில் இருந்து மத்தள வரை அதிக செலவில் தினமும் அவர்களை ஏற்றிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இரத்மலானை விமான நிலையம் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட விமான நிலையமாகவே உள்ளது என அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்மலானை சர்வதேச விமான நிலையம் மார்ச் 27 அன்று சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது. அன்றையதினம் தனது முதல் பயணத்தை வந்த மாலைதீவு தேசிய விமானம் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றது. விமான நிலைய திறப்பு விழாவிற்கு சுமார் 8 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top