ஜெர்மனியில் நடைப்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் முனிச் நகரம் நோக்கிச் சென்று கொண்டு இருந்த ரயில் கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற பவேரியன் ஸ்கை ரிசார்ட்டின் வடக்குப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது ரயிலில் பள்ளி மாணவர்கள் உட்பட 60 பயணிகள் நிரம்பி இருந்ததாகவும் இதில் 4 பேர் வரை உயிரிழந்ததுடன் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுத் தொடர்பாக காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ள கருத்தில், ரயில் விபத்தின் போது 60 பயணிகள் வரை ரயிலில் பயணித்ததாகவும், அதில் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிகப்பெரிய அளவிலான அவசர சேவை நடவடிக்கை நடைப்பெற்று வருவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் பாதையை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.