இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களிடம் காணொளி மூலம் உரையாற்றிய அவர்,
குழந்தைகள் அனாதை இல்லங்களிலிருந்தும் அவர்களின் பெற்றோரிலிருந்தும் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவதாகக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடத்தப்பட்ட குழந்தைகள் ரஷ்யாவில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இது சட்டவிரோத செயலாகும். எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரில் இதுவரை 243 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 446 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் புரிந்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய ஜெலன்ஸ்கி , உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாது என்றும், உக்ரைன் மக்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.