News

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் டேவிட் டிரிம்பிள் காலமானார்!

 

 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல்-மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார்.

அவருக்கு வயது 77. அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி(யூயூபி) தெரிவித்துள்ளது.

அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார்.

அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்த, அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு 1998ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது


Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top