ஆபத்தான கொலைக் குற்றவாளி ஒருவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள லிட்டில் இத்தாலி பகுதி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டது.
35 வயதான ராபி அல்காலில் என்ற கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் 18ம் திகதி பாதாள உலகக் குழு முரண்பாடுகள் காரணமாக ராபி உள்ளிட்ட நான்கு பேர் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் ராபி உள்ளிட்டவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2018ம் ஆண்டில் மேலும் இரண்டு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ராபிக்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விச்சாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் ராபி என்ற கைதி தப்பிச் சென்றுள்ளார்.
சிறைச்சாலையிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் போன்ற போர்வையில் ராபி தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நபர் பற்றிய விபரங்கள் ஏதும் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.