அமெரிக்கா இங்கு வந்து இந்த தீவில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அமெரிக்கா ஸ்ரீலங்காவுக்கு உதவுவதையும்,அமெரிக்கா அனைத்தையும் கவனித்துக்கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.
தமிழர்களின் அரசியல் விருப்பத்திற்கு அமெரிக்கா வந்து தீர்வு காண வேண்டும். தமிழர்களின் போராட்டம் என்றும் ஓயாது. தமிழருக்கு இறையாண்மையின்றி இலங்கை ஒரு தேசமாக வாழ முடியாது.
இழந்த இறையாண்மையை மீட்டெடுக்க விரும்பும் தமிழர்கள்
சிங்கள பௌத்த மகாசங்கம் தமிழர்களை அவர்களது சொந்த புராதன நிலங்கலில் வாழ விடமாட்டார்கள். தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் சொந்த இறையாண்மை இருப்பது நல்லது.
தமிழர்கள் தங்கள் இழந்த இறையாண்மையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள்.நாம் நம்மை ஆள விரும்புகிறோம், நமது பொருளாதாரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் நாம் வழி நடத்த விரும்புகிறோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் சிவில் சமூகங்கள் உட்பட போரில் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்கா அழைத்து, இந்தக் மக்களுடன் கலந்தாலோசித்து வாக்கெடுப்பு நடத்துங்கள் அல்லது சிங்களவர்களுடன் பேசித் தமிழர்களுக்கு இறையாண்மையை எடுத்து தாருங்கள்.
எல்லா தமிழ் எம்.பி.க்களும் அமெரிக்காவின் தலையீட்டை விரும்பவில்லை, ஏனென்றால் எந்தவொரு அரசியல் தீர்வும் தங்களின் தற்போதைய அரசியல் அதிகாரத்தை தங்கள் வாக்காளர்களுக்குள் அழித்துவிடும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள்.
அமெரிக்கா ஒரு பணக்கார, இராணுவ வலிமை மற்றும் ஜனநாயக நாடு.தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அமெரிக்காவினால் மட்டுமே உதவ முடியும்.
அமெரிக்கா தமிழர்களுக்கு உதவ முன்வந்தால் யாராலும் தடுக்க முடியாது
அமெரிக்கா தமிழர்களுக்கு உதவ முடிவெடுத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது, ஏனென்றால் ஒட்டுமொத்த உலகமும் சீனா, இந்தியா உள்ளிட்ட எல்லோரும் அமெரிக்க பொருளாதாரத்தை நம்பியே உள்ளது.
உலகில் அமெரிக்கா மட்டுமே உலகில் ஜனநாயக நாடுகளை விரும்புகிறது.தமிழர்களின் இறையாண்மைக்கும் தமிழர்களின் பொருளாதாரத்திற்கும் அமெரிக்கா உதவ வேண்டும் என்று ஒவ்வொரு தமிழர்களும் நமது அமைப்புகளும் அழைக்க வேண்டும்.
ஜே.வி.பி கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதையும் அதே ஜே.வி.பி தான் காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தியதையும் நினைவுகூருகின்றோம்.
எனவே, காலி முகத்திடல் போராட்டக்காரர்களை நம்ப வேண்டாம்.தயவுசெய்து இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள், இலங்கை பலவீனமாக உள்ளது. அமெரிக்காவைப் பயன்படுத்தவும், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விரும்புவதைப் பெற இதுவே சிறந்த நேரம். போஸ்னியா, கொசோவோ, கிழக்கு திமோர், தெற்கு சூடான் மற்றும் பல நாடுகளுக்கு இறையாண்மையை உருவாக்க அமெரிக்கா மட்டுமே உதவியது.சீனா, ரஷ்யா, இந்தியா தமிழர்களுக்கு உதவாது. அவர்கள் எப்பொழுதும் ஸ்ரீலங்காவின் பக்கம்தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.