இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவாகியுள்ள நிலையில், அடுத்த பிரதமர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
பிரதமர் பதவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) மற்றும் விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapaksa) ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், புதிய பிரதமர் ஒருவரை, ஜனாதிபதியின் விருப்பின் பேரில் நியமிக்க முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றின் பெரும்பான்மையை பெறும் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி, புதிய பிரதமராக நியமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.