News

இலங்கையில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

 

 

இலங்கையில் உள்ள இந்திய பிரஜைகள் அண்மைய நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ள அதேவேளை, தமது நகர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை திட்டமிடுமாறும் இலங்கைக்கான இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேவைப்படும் சந்தர்ப்பங்களில் தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்திய பிரஜையும் இந்திய விசா நிலைய பணிப்பாளருமான விவேக் வர்மா படுகாயமடைந்தார். இவ்வாறான நிலையிலேயே இலங்கையில் உள்ள இந்தியப் பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதலில் படுகாயமடைந்த விவேக் வர்மாவை இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் நேற்று காலை சந்தித்தனர். இந்தத் தாக்குதுல் குறித்து இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.


Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top