News

இலங்கையை பொறிக்குள் வீழ்த்தி அழித்த சீனா! பகிரங்கப்படுத்திய தாய்வான்

 

 

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன்பொறியே காரணம் என தாய்வான் தெரிவித்துள்ளது.

தாய்வானின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜோன் ஓ இதனை தெரிவித்துள்ளார்.

மோசமான நிதி நெருக்கடி

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கே டொலர்களை செலுத்த முடியாத நிலையில் இலங்கை உள்ளது.

1948 சுதந்திரத்தின் பின்னர் அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்து உள்ளது. இலங்கை அதன் மோசமான நிதி நெருக்கடிக்கு சந்தித்து வருகின்றது.

சீனாவின் கடன் பொறி

இலங்கை நெருக்கடிக்கு கொரோனா காரணம் என அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் சில நிபுணர்கள் தவறான அரசியல் மேலாண்மை மற்றும் சீனாவின் கடன் பொறியே காரணம் என்கின்றனர்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இலங்கை உள்ளது, இது சீனாவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் உள்கட்டமைப்புக்கு நிதியளித்து கட்டமைக்கும் நீண்ட கால திட்டமாகும்.

அமெரிக்கா உட்பட சில நாடுகள் இந்த திட்டத்தை சிறிய மற்றும் ஏழை நாடுகளின் மீது கொண்டுள்ள “கடன் பொறி” என்று பெயரிட்டுள்ளனர்.

இருப்பினும், சீனா எப்போதுமே இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதில்லை, தமது பெயரை கெடுக்கும் முகமாக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என கூறி இவற்றை மறுக்கின்றனர்”, எனக் குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top