News

இலங்கை நிலைமைகள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

 

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

வன்முறைகளைத் தவிர்த்து, அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு அனைத்து தரப்பினரும் இலங்கையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் கோரியுள்ளது.

சட்டத்தின் ஆணையை மதித்து அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.

இராணுவம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் மனித உரிமைகளை மதித்துச் செயற்பட வேண்டுமென கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம்

அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டாரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் சமாதானமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போராட்டக்காரர்களின் மெய்யான கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கான மூல காரணங்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top