இலங்கையின் 15-வது புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். 73 வயதான தினேஷ் குணவர்த்தன முன்னாள் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தவர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்காக கடந்த மே மாதம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு அதிபர் கோத்த பய ராஜபக்சே இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார்,
தற்போது அவர் சிங்கப்பூரில் தங்கி உள்ளார். மேலும் அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் புதிய பிரதமராக யாரை நியமிக்கலாம் என அவர் ஆலோசனை நடத்தினார் . இதில் ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தனவை நியமிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இலங்கையின் 15-வது புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
73 வயதான தினேஷ் குணவர்த்தன முன்னாள் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தவர். இவர் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார். புதிய பிரதமருக்கு அக்கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்