News

ஈராக்கில் உள்ள துருக்கி தூதரகம் மீது தாக்குதல்!

 

 

ஈராக்கின் வடக்கு நகரமான மொசூலில் உள்ள துருக்கியின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஈராக்கின் மோசூல் நகரில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக பணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது ஈராக்கின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மோசூலில் உள்ள துருக்கியின் தூதரகம் நேற்று (புதன்கிழமை) காலை தாக்கப்பட்டதாக அதன் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என ஈராக்கிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘இராஜதந்திர மற்றும் தூதரகப் பணிகளைப் பாதுகாப்பதில் ஈராக் அதிகாரிகளின் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு நாங்கள் உறுதியாகக் கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளது.

தூதரகம் மீதான தாக்குதலில் நான்கு ரொக்கெட்டுகள் தாக்கி, தூதரகத்திற்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு சேதம் விளைவித்ததாக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

ஆனால் அதை மறுத்த மற்றொரு அதிகாரி மோட்டார் குண்டுகள் கட்டடத்திற்கு அருகிலும் அதன் சுற்றளவிலும் வெடித்ததாக கூறினார்.

அதேவேளை, ஈராக் அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் தாமே தாக்குதலை நடத்தியதாக கூறியதை துருக்கி நிராகரித்துள்ளது.

துருக்கி வழக்கமாக வடக்கு ஈராக்கில் வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது மற்றும் அங்குள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் போராளிகளுக்கு எதிரான அதன் தாக்குதல்களுக்கு ஆதரவாக கமாண்டோக்களை அனுப்பியுள்ளது.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கவனம் செலுத்தவும், அவர்களின் பிரதேசத்தில் பயங்கரவாதிகளின் பிரசன்னத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஈராக் அதிகாரிகளுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்’ என்று அமைச்சகம் மேலும் கூறியள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top