தெற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், தாழ்வான பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். இதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக பல தசாப்தங்களாக வறட்சியை சந்தித்து வரும் ஈரானின், நாடு முழுவதும் பருவகால மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து நகர ஆளுநர் யூசப் கரேகர் கூறியதாவது:- கனமழையால் எஸ்தாபன் நகரின் ரௌட்பால் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளர். ஆறு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்