News

உக்ரைனில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்வு: ஐ.நா. தகவல்!

 

 

ரஷ்யா படையெடுத்ததில் இருந்து உக்ரைனில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர்.

உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

இதனிடையே, உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷ்யா 3000க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தின.

கப்பல் கட்டும் தளம் உள்பட தொழில்துறை கட்டமைப்புகள், பொது உட்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன என தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top