உக்ரைன் போரில் சுமார் 15,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது
, உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இரு தரப்பு பேச்சுவாரத்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரு தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களை இந்த போர் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் போரால் இதுவரை சுமார் 15 ஆயிரம் ரஷிய படைகள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் 45 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷிய படையில் தாக்குதல்களால் அப்பாவி உக்ரைனிய பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.