வெளிநாடு ஒன்றில் இருந்து பிரான்ஸிற்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த நபர் ஒருவர் ஒரே இரவில் பதின்ம வயது பெண் உட்பட மூவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பிரான்ஸின் Maine-et-Loire மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்யேர் (Angers)பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலைவேளை இடம்பெற்றுள்ளது.
3 இளம்பெண்கள் குத்திக் கொலை
மேலும் தெரிய வருகையில், குறித்த நபர் இசை நிகழ்ச்சி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு சென்ற அவர், பெண்களிடம் தகாத சீண்டலில் ஈடுபட்ட போது அவர்கள் கத்தி கூச்சலிட்டமையால் கோபமடைந்த நபர் அவர்களை கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவ தினத்தன்று இரவு பதின்ம வயது பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் இருந்த நிலையில், அவர்கள் மூவரையும் அந்த நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 16,18 மற்றும் 20 ஆகிய வயதுடையவர்களாவர். சந்தேக நபர் கொலைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரென கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் , சந்தேகநபர் மனநல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளாரா என ஆராயப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.