News

கடல் மார்க்கமாக தலைதெறிக்க ஓடும் இலங்கை அரசியல்வாதிகள் (படங்கள்)

 

 

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் தப்பியோடி வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, விமான நிலையம் சென்றுள்ள நிலையில், பல அரசியல்வாதிகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற இரண்டு கப்பல்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

மக்களின் போராட்டத்தை அடுத்து நிலைமை உணர்ந்து கொண்ட அரசியல்வாதிகள் தப்பியோடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் மற்றும் மஹிந்தவுக்கு நெருக்கமான பல அரசியல்வாதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

 

 

இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படையின் இரண்டு கப்பல்களில் ஒரு குழுவினர் ஏறுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

SLN சிதுரல மற்றும் SLN கஜபாஹு ஆகிய இரண்டு கப்பல்களும் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தகவல் குறித்து, இலங்கை கடற்படை இதுவரை தகவல் எதனையும் வெளியிடவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top