Canada

கனடாவின் இரவு கேளிக்கை விடுதியில் சராமரி துப்பாக்கிச் சூடு-இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு.

.

 

 

கனடாவின் இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் சராமரி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஒன்றாரியோ மாகாணத்தின் வோகனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் அதிகாலை வேளையில் இந்த துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இதில் மற்றுமொரு பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 25 வயது மற்றும் 20 வயதான இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

20 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் இருந்தால் 1-866-876-5423 ext. 7865 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் கோரியுள்ளனர்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top