கனடா முழுவதும் 681 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருப்பதாக டுவிட்டரில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும், அவர்களுடன் பொருட்களை பகிர்ந்துகொள்பவர்களுக்கும் இந்நோய் தொற்றக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வெளியாட்கள் வந்து சென்ற பிறகு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும், முககவசம் அணிய வேண்டும், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதற்கான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று கனடா சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.