Canada

கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது

கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் 1985-ம் ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 329 பேர் கொல்லப்பட்டது, கனடா வரலாற்றின் கருப்பு அத்தியாயம் ஆகும்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையானவர், சீக்கிய தொழில் அதிபர் ரிபுதமான் சிங் மாலிக் ஆவார். இவர் கடந்த 14-ந் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் டானர் பாக்ஸ் (வயது 21), ஜோஸ் லோபஸ் (23) ஆவார்கள். ஆனால் இந்தக் கொலையின் பின்னணி என்ன என்பது இன்னும் தெரிய வரவில்லை. கைது செய்யப்பட்டவர்களிடம் கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top