Canada

கனேடிய அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவு, பணவீக்கவீதம் உயர்வடையும் என எச்சரிக்கை

 

 

கனேடிய மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் எனவும் பணவிக்க வீதம் இந்த ஆண்டு முழுவதும் உயர்வடைந்த நிலையிலேயே நீடிக்கும் என கனடா மத்திய வங்கியின் ஆளுநர் ரிப் மேக்களம் (Tiff Macklem) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில், 1983 ஆம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டு ஜூன் மாதம் பணவீக்க வீதம் எட்டு தசம் ஒன்றாக பதிவாகியுள்ளது.

துரதிஷ்டவசமாக இந்த ஆண்டு முழுவதும் பணவீக்க வீதம் 7 புள்ளிக்கு மேல் காணப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த பணவீக்க வீதமானது மக்களுக்கு நெருக்குதல்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேள்விக்கு ஏற்ற அளவில் பொருட்கள் நிரம்பல் செய்யப்படாத காரணத்தினால் பணவீக்க வீதம் தொடர்ச்சியாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை இரண்டு வீதமாக குறைப்பது என்ற இலக்கு மிக விசாலமானது எனவும் அதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறேனும் இந்த ஆண்டில் பணவீக்க வீதம் குறைவடைவதற்கு வாய்ப்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

எரி வாயு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top