News

கொழும்பில் இன்றும், நாளையும் வெடிக்கப்போகும் போராட்டங்கள்! ஊரடங்கு குறித்து வெளியாகியுள்ள தகவல்

 

 

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்றும், நாளையும் கொழும்பில் பல்வேறு போராட்டங்கள் முன்டுக்கப்படவுள்ளன.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் இந்தப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துடன் இணைந்ததாகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவர்கள் தனித்தனியே பல்வேறு இடங்களில் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், சில குழுக்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை வீதிகளில் போராட்டங்கள் தீவிரமடையும் நிலைமை ஏற்படுமாக இருந்தால் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top