நேற்று (ஜூலை 13) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 84 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
காயமடைந்த 84 ஆர்ப்பாட்டக்காரர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 37 பேர் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் ஐந்து பெண்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரி உட்பட 5 பேர்
மேலும் ஆர்ப்பாட்டத்தில் இராணுவ அதிகாரி ஒருவர், இரண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ப்ளவர் வீதியில் 42 பேர்
இதற்கிடையில், கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே காலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது காயமடைந்த 42 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.