ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளையதினம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று மாலை முதல் கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் நாளை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள
முகநூல் பதிவில், பட்சி பறக்க போகுதாம். போகும் முன், நரியை விலக்கி விட்டு, அங்கே ஓநாயை இருத்தி விட்டு, பறக்க தயாராகுதாம் என்றவாறு பதிவினை இட்டுள்ளார்.
மேலும், இரவிலேயே ஆரம்பித்து விட்டோம் எனது தொகுதி கொழும்பு கொச்சிக்கடையா, கொக்கா..? வந்தால் மாலையிட்டு வரவேற்போம்! அடித்தால் எண்ணி உதைப்போம்! “கோடா_நீ_போப்பா” , எனவும் முகநூலில் மற்றொரு பதவியை இட்டுள்ளார்.
போராட்டத்தை கொச்சிக்கடையில் இன்றிரவே மனோ கணோசன் ஆரம்பித்துள்ளார்.