News

சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

அமெரிக்கா – சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கு சந்தேகத்திற்கு இடமாக பொதி ஒன்றும் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிரட்டலை அடுத்து சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சில சேவைகளும் இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று அடையாளம் காணப்பட்டதாகவும் சான்பிரான்சிஸ்கோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது..

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top