சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியாகினர்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தின் ஜிங்தாய் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது.
நேற்று காலை இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 17 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதை தொடர்ந்து உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 16 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்தனர்.